Friday, February 28, 2014

50–வது நாளைத் தொட்டது விஜய்யின் ஜில்லா!!!

விஜய், காஜல்அகர்வால் ஜோடியாக நடித்த ‘ஜில்லா’ படத்தின் 50–வது நாள் வெற்றி விழா இன்று கொண்டாடப்பட்டது. சென்னையில் ‘ஜில்லா’ படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களில் ரசிகர்கள் பட்டாசு வெடித்தனர். இனிப்பு வழங்கினார்கள்.

திருவள்ளூர் தெற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் பாலமுருகன் தலைமையில் பள்ளி குழந்தைகளுக்கு பிரியாணி வழங்கப்பட்டது. நிர்வாகிகள் ஆனந்த், சோகன், சண்முகம், சுரேந்தர், விக்கி, முனியா, ரமேஷ் கலந்து கொண்டனர். பட்டாபிராமில் வினோத் நோட்டு புத்தகம் வழங்கினார். அயப்பாக்கத்தில் ராஜேஷ், சசி வேட்டி, சேலை வழங்கினர். மாதவரத்தில் மூர்த்தி, முருகன் ஆகியோர் ‘கேக்’ வெட்டினர்.

காஞ்சி கிழக்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் இ.சி.ஆர். சரவணன் தலைமையில் தாம்பரம் பார்க் கோவிலில் சிறப்பு பூஜை செய்து காஞ்சீபுரம் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் தாம்பரம் டி.ரமேஷ் ஏழைகளுக்கு உதவி பொருட்கள் மற்றும் உணவு வழங்கினார். நிர்வாகிகள் சரத், ரமேஷ், கே.விஜய் கலந்து கொண்டனர்.

Posted By: Unknown

50–வது நாளைத் தொட்டது விஜய்யின் ஜில்லா!!!

Share:

Post a Comment

Facebook
Blogger

No comments:

Post a Comment

Follow Us

About Us

Advertisment

Like Us

© The Cine Hub All rights reserved | Theme Designed by Seo Blogger Templates