Monday, February 10, 2014

லட்சுமி விஷாலுக்கு லிப் டூ லிப் முத்தம்.... காதலில் சிக்கிவிடாதே லட்சுமி மேனன் – அம்பிகா அறிவுரை

இது சம்பாதிக்கும் வயது. அதனால் காதலில் சிக்கிவிடாதே என்று நடிகை லட்சுமி மேனனுக்கு அம்பிகா அறிவுரை வழங்கியுள்ளாராம்.

பழம்பெரும் நடிகை அம்பிகா ஜிகர்தண்டா படத்தில் லட்சுமி மேனனின் அம்மாவாக நடித்துள்ளார். இந்த படத்தில் சித்தார்த் ஜோடியாக நடித்துள்ளார் லட்சுமி மேனன். கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படம் வரும் ஜூன் மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

ஜிகர்தண்டா படப்பிடிப்பின்போது அம்பிகாவும், லட்சுமி மேனனும் மிகவும் நெருக்கமாகிவிட்டார்களாம். படம் தவிர்த்து நிஜத்திலும் அம்மா, மகள் போன்று பாசமாக இருக்கிறார்களாம்.

அம்பிகாவும் சரி, லட்சுமி மேனனும் சரி கேரளாவைச் சேர்ந்தவர்கள். சேச்சிகள் இருவரும் படப்பிடிப்பில் ஒருவர் மீது மற்றொருவர் பாசமழை பொழிந்து வருகிறார்களாம்.

இது தான் சம்பாதிக்கும் வயது உனக்கு. அதனால் தற்போது காதல் கீதல் என்று எதிலும் சிக்காமல் உஷாராக இருந்து கொள் என்று அம்பிகா லட்சுமிக்கு அறிவுரை வழங்கியுள்ளாராம்.

லட்சுமி மேனன் பக்கத்து வீட்டு பெண் போன்று இருந்தாலும் கோலிவுட்டின் பிசியான நாயகிகளில் அவரும் ஒருவர். கோடம்பாக்கத்திற்கு வந்த வேகத்தில் அபார வளர்ச்சி கண்டவர் லட்சுமி என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சுமி மேனன் விஷாலுடன் சேர்ந்து நடித்த பாண்டியநாடு ஹிட்டானது. இதையடுத்து அந்த ஜோடி நான் சிகப்பு மனிதன் படத்தில் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளது. இந்த படத்தில் லட்சுமி விஷாலுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்துள்ளாராம்.

Posted By: Unknown

லட்சுமி விஷாலுக்கு லிப் டூ லிப் முத்தம்.... காதலில் சிக்கிவிடாதே லட்சுமி மேனன் – அம்பிகா அறிவுரை

Share:

Post a Comment

Facebook
Blogger

No comments:

Post a Comment

Follow Us

About Us

Advertisment

Like Us

© The Cine Hub All rights reserved | Theme Designed by Seo Blogger Templates